Thu. Dec 18th, 2025

தென்காசி:
வாட்சாப்பில் பரவும் சந்தேகத்துக்கிடமான லிங்குகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாமென தமிழ்நாடு டுடே தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் அமல் ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

“வாட்சாப்பில் வரும் இதுபோன்ற போலி செய்திகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய லிங்குகளைக் கிளிக் செய்தால் உங்கள் வாட்சாப் கணக்கும், செல்போன் தரவுகளும் சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட வாய்ப்பு அதிகம். பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.”

சமீபத்திய சைபர் மோசடி சம்பவங்களை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்குகளைத் திறக்காமல் இருக்கவும், OTP பகிராதீர்கள், தனிப்பட்ட தகவல்களை அளிக்க வேண்டாம். சந்தேகமான செயல்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930-ல் தொடர்புகொள்ளவும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

By TN NEWS