Fri. Feb 27th, 2026


வேலூர், நவம்பர் 21:
குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயணிகள் தங்கும் இடத்தில், அடையாளம் தெரியாத சுமார் 45 வயதுடைய ஆணின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும், குடியாத்தம் நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். அக்கம் பக்கத்தவர்களிடம் விசாரித்ததில், கடந்த மூன்று நாட்களாக அந்த ஆண் பஸ் நிலையம் அருகே தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

போலீசார் சடலத்தை மீட்டு, அமரர் ஊர்தி மூலம் உடல்கூறு ஆய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS