இராமநாதபுரம் மாவட்ட மண்டல கூட்டுறவு துறையின் சார்பில், இராமநாதபுரம் பரகத் மஹாலில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா! 2025 சிறப்பாக நடைபெற்றது. விழா நிகழ்ச்சிக்கு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு. R. S. ராஜ கண்ணப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., அவர்களும் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பூட்டினர்.
அதேபோல்,
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன்,
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு. கரு. மாணிக்கம்,
இராமநாதபுரம் நகர மன்ற தலைவர் திரு. ஆர். கே. கார்மேகம்,
இராமநாதபுரம் மண்டல இணை பதிவாளர் (கூட்டுறவு) திருமதி கோ. ஜினு,
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் இணை பதிவாளர் திருமதி ராஜலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ராம்கோ பண்டகசாலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர்: செந்தில்குமார்
மாவட்ட ஒளிப்பதிவாளர்: இராமச்சந்திரன்

