Wed. Nov 19th, 2025



தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக நியமிக்கப்பட்டுள்ள மௌலானா மெளலவி N.P. உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி, பாஜிலே மஜாஹிரி, காசிமி ஹஸ்ரத் கிப்லா அவர்களை மரியாதை நிமித்தமாக தென்காசி மாவட்ட SDPI கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தென்காசி மாவட்ட SDPI சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் திவான் ஒலி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் இன்று கடையநல்லூரில் உள்ள காஜி அவர்களின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் நயினார் முகம்மது, மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மக்மூத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஷேக் முகம்மது ஒலி, மாவட்ட செயலாளர் சீனா. சேனா. சர்தார், தொகுதி தலைவர் ஹக்கீம் சேட், துணைத்தலைவர் நைனாமுஹம்மது கனி (முன்னாள் M.C.), செயற்குழு உறுப்பினர் பாதுஷா, நகர தலைவர் வழி. லுக்மான் ஹக்கீம், நகர செயலாளர் தாஜுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு டுடே தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்: அமல் ராஜ்

By TN NEWS