Wed. Nov 19th, 2025



புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பான சாதனைப் படைத்து அனைவரையும் கவர்ந்துள்ளனர். சரக அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம், கபடி போட்டியில் இரண்டாம் இடம், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் ஆகியவற்றை பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, கணபதி, கார்த்திக் ஆகியோரையும், மாணவர்களையும் பள்ளித் தலைமை ஆசிரியர் மணி அவர்கள் வாழ்த்தி பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஊர் பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.

தமிழ்நாடு டுடே செய்தியாளர்

By TN NEWS