நவம்பர் 12 | திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில், டயாலிசிஸ் பிரிவில் புதிதாக பொருத்தப்பட்ட இரண்டு புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.
தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, மருத்துவ சேவைகள் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அவருடன் இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) டாக்டர் மீரா, மற்றும் பல்லடம் நகர்மன்றத் தலைவர் திருமதி கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் மூலம், பல்லடம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவ சேவையை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்க இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
🖋️ செய்தியாளர் — தமிழ்நாடு டுடே
