Wed. Nov 19th, 2025

குடியாத்தம் (நவம்பர் 12):
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தின் கூடநகரம் ஊராட்சியில், 15வது நிதிக் குழுத் திட்டம் (2025–2026) மற்றும் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா மற்றும் பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.

சுமார் ₹78,20,000 மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த புதிய சுகாதார நிலையம், ஊராட்சி மக்களுக்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி பிரதீஷ்,
அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் நத்தம்பிரதீஷ், மருத்துவர் மாலதி,செவிலியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


📸 செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன் 

குடியாத்தம் தாலுக்கா செய்திகள்

By TN NEWS