வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், சீவூர் மதுரா முனாப் டிப்போ பகுதியில் வசித்து வரும் ரஹமத் (40), கணவர் மௌலானா என்பவருக்கு சொந்தமான கூரை வீடு இன்று மாலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிபத்தில் வீட்டிலிருந்த ஆடைகள் மற்றும் சில வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஹமத்தின் கணவர் மௌலானா பீடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகளும் நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர் என்று தெரிகிறது.
செய்தி தொடர்பு:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்