வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (40), தந்தை முருகேசன் என்பவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தட்டப்பாறை கிராமத்தின் சர்வே எண் 100 ஏரியில் மீனவர்கள் வலை விரித்தபோது, சங்கர் ஏரியில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த குடியாத்தம் கிராமிய காவல்துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சங்கருக்கு மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் என்று தகவல்.
குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி தொடர்பு:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
