வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், குடியாத்தம் வட்டக் கிளை சார்பில் இன்று (நவம்பர் 11) காலை புதிய பஸ் நிலையம் அருகில் மாபெரும் அரை நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர் எஸ். சரவணன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் எஸ். கோடீஸ்வரன், பொருளாளர் பி. தனபால், இணை செயலாளர்கள் எம்.ஆர். மணி, எஸ்.டி. திருநாவுக்கரசு, கே. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தர்ணா போராட்டத்தை மாநில துணைத் தலைவர் பி. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் ஏ. ராஜேந்திரன், கே. ரகு ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.
போராட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:
70 வயது கடந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
கம்யுடேஷன் பிடித்தம் காலம் 15 ஆண்டுகளில் இருந்து 11 ஆண்டுகளாக குறைக்கப்பட வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹7,850 வழங்கப்பட வேண்டும்.
அங்கன்வாடி, வனத்துறை, ஊராட்சித் துறை ஓய்வூதியர்களுக்கு சத்துணவு உதவி வழங்கப்பட வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்ட குறைபாடுகளை நீக்கி, அனைத்து ஓய்வூதியர்களும் பயன் அடைய வகை செய்ய வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு எதிரான “வேலிடேசன் சட்டம்” திரும்ப பெறப்பட வேண்டும்.
போராட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
இறுதியில் எஸ்.டி. திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
செய்தி தொடர்பு:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்