நவம்பர் 7, குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்முட்டுகூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட தட்டாங்குட்டை ஏரி இன்று காலை முழுமையாக நிரம்பி வழிந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பொழிவதால் மோர்தனா அணை முழுமையாக நிரம்பியுள்ளது. இதன் உப ஏரிகளான குடியாத்தம் அருகிலுள்ள நெல்லூர்பேட்டை, அக்ராவரம், ஏரிபட்டரை, எர்த்தாங்கள், செட்டிகுப்பம் உள்ளிட்ட ஏரிகள் கடந்த மாதமே நிரம்பியிருந்தன.
இன்று தட்டாங்குட்டை ஏரி நிரம்பி வழிந்ததுடன், பாசனத்திற்கான நீர் கிடைக்கும் என்பதில் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே. வி. ராஜேந்திரன்
