குடியாத்தத்தில் 4 மாத பெண் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு?
நவம்பர் 4 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்
குடியாத்தம் மேற்கு உள்வட்டம் தனகொண்டபள்ளி கிராமத்தில் 4 மாத பெண் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தது.
அந்த பகுதியில் வசிக்கும் வினோத்குமார் (29), அவரது மனைவி மதுமிதா (23) ஆகிய தம்பதியினர் கூலி தொழிலாளர்கள். இவர்கள் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இவர்களின் 4 மாத பெண் குழந்தைக்கு இன்று (04.11.2025) மாலை சுமார் 3 மணி அளவில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே குழந்தையை மோடிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக குழந்தையின் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் துயரத்தில் வாடுகின்றனர்.
செய்தி:
கே.வி. ராஜேந்திரன்
வேலூர் தாலுகா செய்தியாளர்.