Thu. Nov 20th, 2025



செப்டம்பர் 1 — வேலூர் மாவட்டம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் வளத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா சேட்டு தலைமையிலும், துணைத் தலைவர் பி.செல்வம் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை விளக்கினார். மேலும், மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

கிராம சபை கூட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினர் பிரியா சக்திவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநர் திருமால், குடியாத்தம் தாசில்தார் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் நல ஆலோசனைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் வளத்தூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில் ஊராட்சி செயலர் ரேவதி நன்றி தெரிவித்தார்.

📸 செய்தி: குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS