Thu. Nov 20th, 2025

நாள்: 01.11.2025, சனிக்கிழமை
🕚 நேரம்: காலை 11.00 மணி
📍 இடம்: அழகாபுரி அரசு உயர்நிலைப்பள்ளி

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில், ஊராட்சி செயலாளர் கர்ணன், தூய்மை காவலர்கள், அலுவலக பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


🔹 கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

தீர்மானம் 1:
கிராம ஊராட்சியின் 01.04.2025 முதல் 31.10.2025 முடியவுள்ள காலத்திற்கான நிதி செலவின அறிக்கையை (படிவம் 30) வாசித்து ஒப்புதல் பெற்றல்.

தீர்மானம் 2:
கடந்த ஆண்டுக்கான கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கையை கிராம சபையில் வாசித்து ஒப்புதல் பெற்றல்.

தீர்மானம் 3:
மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஊரகப் பகுதிகளில் கட்டாயமாக உருவாக்கி, உள்ள அமைப்புகளை பராமரித்து, நீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல தீர்மானம்.

தீர்மானம் 4:
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் – துப்புரவு பணி, குடிநீர் தொட்டிகள் சுத்தம், குளோரின் கலந்து நீர் விநியோகம், கொசு இனப்பெருக்கம் தடுக்க நடவடிக்கை.

தீர்மானம் 5:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை – தாழ்வான இடங்கள் சீரமைத்தல், புயல் பாதுகாப்பு மையங்கள் தயாராக வைத்தல், வாய்க்கால்கள் சுத்தம், மணல் மூட்டைகள் மற்றும் கரை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

தீர்மானம் 6:
மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – ஊராட்சி மற்றும் வட்டார கூட்டமைப்புகளின் பதிவு புதுப்பித்தல், 2024–25 தணிக்கை அறிக்கை சமர்ப்பித்தல்.

தீர்மானம் 7:
மனநலம் மற்றும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள் – பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

தீர்மானம் 8:
மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) தொடர்பான பயிற்சி – மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

தீர்மானம் 9:
பாலினம் தொடர்பான பயிற்சி – மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊக்குநர் பிரதிநிதிகளுக்கான பயிற்சிகள்.

தீர்மானம் 10:
SHG உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் – இதன் மூலம் பேருந்து பயணம், மருத்துவ காப்பீடு, கோ-ஆப்டெக்ஸ் தள்ளுபடி, கடன் முன்னுரிமை, ஆவின் சலுகைகள் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

தீர்மானம் 11:
தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் – 18–35 வயது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள், வேலைவாய்ப்பு முகாம்கள் பற்றிய தகவல்.

தீர்மானம் 12:
RSETI ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி – அலுமினியம் வடிவமைப்பு, தச்சு, செல்போன் பழுது, வீட்டு வயரிங், ஓட்டுனர் பயிற்சி, வெல்டிங் போன்ற இலவச பயிற்சிகள். பயிற்சிக்குப்பின் வங்கி கடன் வசதி.

தீர்மானம் 13–16:
மகளிர் கூட்டமைப்பு பதிவுகள் புதுப்பித்தல், மனநலம், மாதவிடாய் சுகாதாரம், பாலின சமநிலை தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள்.

தீர்மானம் 17:

குழந்தை தத்தெடுத்தல் அரசு விதிமுறையின்படி நடத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்தல்.

பள்ளி இடைநிறுத்தம் மாணவர்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை.

18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை, கூலிஃப் போன்ற பொருட்கள் விற்பனை தடுக்க கண்காணிப்பு.


📸 செய்தி & புகைப்படம்:
அன்பு பிரகாஷ் முருகேசன்
புகைப்பட கலைஞர் – தேனி மாவட்டம்

 

By TN NEWS