Thu. Nov 20th, 2025

அக்டோபர் 31 – வேலூர் மாவட்டம்

குடியாத்தம் வனப்பகுதிக்குள் வனத்துறையின் அனுமதி இல்லாமல் மண் சாலை அமைத்த விவகாரத்தில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்து, ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில், குடியாத்தம் வன சரகர் சுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறை குழு சைனகுண்டா காப்பு காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது.

அப்போது, ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதி இல்லாமல் தனிநபர் நிலத்திற்குச் செல்லும் வகையில் மண் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதை உடனடியாக தடுத்து, விசாரணை மேற்கொண்ட வனத்துறை, குடியாத்தம் அருகே உள்ள சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த லிங்கையன் மகன் ராஜ்குமார் என்பவரை கைது செய்தது.

இவருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா

By TN NEWS