Thu. Nov 20th, 2025

பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு பொதுநல கோரிக்கைகள் முன்வைப்பு.

தர்மபுரி, அக்டோபர் 31, 2025:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திலுள்ள பொம்மிடி ரயில் நிலையத்தில் இன்று “அமிரித் சம்வாத்” ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்னக ரயில்வே சேலம் பிரிவின் மூத்த வணிக மேலாளர் எம். வாசுதேவன் (SR.DCM) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உதவி வணிக மேலாளர் ஆர். சரவணன் (ADCM), ரத்தீஷ் பாபு (RPF), சபரீஷ் (DEN/E) உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.



ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் கூட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அவை:

சேலம்–அரக்கோணம் மெமோ ரயிலை வாரத்தில் ஏழு நாட்களும் இயக்குதல்,
மூன்றாவது நடைமேடையில் கழிப்பிடம் அமைத்தல்,
RPF புறங்காவல் நிலையம் அமைத்தல்,
கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு விரைவு ரயில் பொம்மிடி நிலையத்தில் நிறுத்தம் வழங்குதல்,
சிசிடிவி கேமரா பொருத்துதல்,
பிரம்மாண்டமான தேசியக்கொடி ஏற்றுதல்.

கூட்டத்தில் சக்தி CCI நிறுவனத்தின் மேகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் DRUCC உறுப்பினர் N. சிவசுப்பிரமணியன், ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஆசான் கான், செயலாளர் ஜெபசிங், பொருளாளர் முணிரத்தினம், துணைத் தலைவர் திருமதி சங்கீதா ஸ்ரீ, துணைச் செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடேசன், சிவகுமார், சுரேஷ், சொக்கலிங்கம், தென்னக ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகி தலைவர் காமராஜ், செயலாளர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.

மண்டல செய்தியாளர் : D. ராஜீவ் காந்தி
தர்மபுரி மாவட்டச் செய்தி

 

By TN NEWS