பெங்களூருவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் — முன்னாள் BPCL நிதி அதிகாரி பகிர்ந்த வேதனை…?
பெங்களூரு:
பாரத் பெட்ரோலியத்தின் தலைமை நிதி அதிகாரியாக (Chief Financial Officer) பணியாற்றி ஓய்வு பெற்ற கே. சிவக்குமார் அவர்கள், தனது ஒரே மகளின் மரணத்துக்குப் பிறகு அனுபவித்த கொடுமையான நிர்வாக அனுபவத்தை LinkedIn தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் பதிவில் எழுதியுள்ளதாவது:
“என் ஒரே மகள் அக்ஷயா, வயது 34. மூளையில் திடீர் ரத்தக் கசிவு ஏற்பட்டு பரிதாபமாக இறந்து விட்டார்.
அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்தபோது, லஞ்சம் கொடுத்தால்தான் வண்டி வரும் என்று பணம் கேட்டனர்.
அதன் பின் பெலந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் FIR பதிவு செய்யவும், போஸ்ட்மார்ட்டம் அறிக்கைக்காகவும் பெரும் தொகையை லஞ்சமாக கேட்டார்.
சுடுகாட்டிலும் என்னிடம் பணம் பறிக்கப்பட்டது.
இறப்பு சான்றிதழ் பெற BBMP அலுவலகத்திற்குச் சென்றபோதும், அங்கும் லஞ்சம் கேட்டு பணம் பிடுங்கினர்.
மகளை இழந்த தந்தையின் மனநிலையில் இருந்த எனக்குப் பதிலாக, இவர்கள் என்மீது இன்னொரு துன்பத்தை சேர்த்தனர்.”
அவர் மேலும் குறிப்பிடுகிறார்:
“என்னிடம் பணம் இருந்ததால் கொடுத்து விட்டேன். ஆனால், ஒரு ஏழை தந்தை இப்படியான சூழ்நிலையில் இருந்தால் அவர் நிலைமை என்னவாகியிருக்கும்?”
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் சம்பவம் உண்மையானது என உறுதி செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தீவிர விசாரணை உத்தரவிட்டுள்ளனர்.
இச்சம்பவம், நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் “மனிதத்தன்மையற்ற ஊழல்!” என மக்கள் கடும் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்.
