மேட்டூர் தந்தை பெரியார் பேருந்து நிலையம் சுமார் 7 ஏழு கோடியில் 2024-ஆண்டு புனரமைக்கப்பட்டது.
திறப்பு விழாவின் போதே(2025 சனவரி )தந்தை பெரியார் பேருந்து நிலையத்தில் குறைந்த பட்சம் பெரியார் மார்பளவு சிலை நிறுவ வேண்டும் (தந்தை பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப் பணியில் வீணாக சிதறிய சிமெண்ட் கலவை செலவு மட்டுமே பெரியார் மார்பளவு சிலை அமைக்க செலவாகும்)
என்ற கோரிக்கை,
திராவிடர் பண்பாட்டு நடுவம் சார்பில் கடந்த சனவரி மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின், துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு மின்னஞ்சல் மற்றும் பதிவு அஞ்சல் வழியாகவும்,
சுற்றுலா துறை அமைச்சர் மாண்புமிகு இராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திருமிகு. டி.எம். செல்வகணபதி ஆகியோருக்கு பதிவு அஞ்சல் மற்றும் நேரிலும் கொடுத்தோம்.
சூன் -12,2025 மேட்டூர் அணை நீர்திறப்புக்கு மேட்டூர் வந்த தமிழக முதல்வரிடம் நேரிலும்,
சேலம் மாவட்ட ஆட்சியர்,
மேட்டூர் கோட்டாட்சியர், மேட்டூர் வட்டாட்சியர்,
மேட்டூர் நகராட்சி ஆணையாளர்,
மேட்டூர் நகராட்சி தலைவர், மேட்டூர் நகராட்சி துணைத் தலைவர் மற்றும் மேட்டூர் நகர் திமுக செயலாளர் என பலருக்கும் மனு கொடுத்து பலமாதங்கள் ஆகியும் இதுவரை நான் அனுப்பிய கோரிக்கை மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை என்பது மிகவும் சங்கடத்துக்குரிய செயலாகும்.
அரசுக்கு ஒரு கோரிக்கை வைப்பது அந்த நாட்டின் வாக்களிக்கும் உரிமை பெற்ற குடிமகனின் கடமை.
கோரிக்கை மனு மீதான நடவடிக்கை சம்பந்தமாக முடியும் முடியாது என்ற விளக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமை.
குடிமக்கள் அளிக்கும் கோரிக்கை மற்றும் குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை சம்பந்தமாக,
தமிழ்நாடு அரசிற்காக தலைமைச் செயலாளர் மற்றும் அரசுத்துறை செயலாளர் கையொப்பமிட்ட நிர்வாக பணியாளர் சீர்திருத்த துறை அரசாணை(அ) நிலை எண் -114,99,73 மற்றும் தற்போதைய தலைமைச் செயலாளர் திரு.முருகானந்தம் கையெப்பமிட்ட அரசாணை- 25 மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு என பல வழிகாட்டல் நெறிமுறைகள் இருந்தும் பொதுமக்கள் கோரிக்கை மனுவிற்கு மூன்று நாளில் ஒப்புகை கடிதம், 30 நாட்களில் கோரிக்கை மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்கள் தெரிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசாணை நடைமுறைகள்,
மேற்குறிப்பிட்ட எனது கோரிக்கை மனு அனுப்பிய தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் எந்த அலுவலக ஊழியர்களாலும் பதில் தெரிவிக்கப்படவில்லை என்பது தந்தை பெரியார் சிலை அமைக்க கோரிக்கை மனு கொடுத்த எனக்கு ஏற்பட்ட சங்கடம் இல்லை.
தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நிர்வாக நடைமுறைக்கு தமிழ்நாடு அரசு துறை ஊழியர்கள் அரசுக்கு ஏற்படுத்தும் சங்கடமாக கருதுகிறேன்.
பெரியார் கொள்கை உலகமயம் ஆகவேண்டும் என முதலமைச்சர் கூறுகிறார்.
உள்ளூரில் சுமார் 7 கோடியில் கட்டப்பட்ட தந்தை பெரியார் பேருந்து நிலையத்தில் சில ஆயிரத்தில் மார்பளவு சிலை அமைக்க தடையாக இருப்பது எது யார் என்பது கடந்த 10 மாதங்களாக புரியாத புதிராக உள்ளது.
பொது மக்கள் கோரிக்கை மனுவிற்கு உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்து பதில் அளிக்காமல் இருப்பது அரசாணை அவமதிப்பு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு என்பது அரசிடம் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு தெரியவில்லையே.
எனது கோரிக்கை மனு மீதான நடவடிக்கை பதில் அளிக்காதவர்கள் சட்டப்படி பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள் என்பது விரைவில் தெரியும்.
சுமார் இரண்டாயிரம் ரூபாய் மற்றும் பலமணிநேரம் செலவழித்து நான் பதிவு அஞ்சலில் அனுப்பிய மற்றும் நேரில் கொடுத்த தந்தை பெரியார் சிலை சம்பந்தமான எனது கோரிக்கை மனு சுமார் 10 மாதங்கள் கடந்தும் தற்போதைய நிலை தெரியவில்லை.
திராவிட மாடல் அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்த காரணமாக பணிபுரியும் அரசு ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் கடமை திமுக கட்சி நிர்வாகிகளுக்கும் உண்டு என்பதை பல திமுக நிர்வாகிகள் மறந்து விட்டனரா???
கி.முல்லைவேந்தன்.எம்.ஏ(சமூகவியல்)
தலைவர்/நிர்வாகி,
திராவிடர் பண்பாட்டு நடுவம் (DCC),
சாதி மறுப்பு திருமண மையம்.
மாநில பொதுச் செயலாளர்.
அம்பேத்கர்-பெரியார் கலப்பு திருமணம் செய்தோர் நலச் சங்கம்.
#CMStalin
#Uthayanithistalin #TMSelvaganapathi
பதிவு: ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்
