Wed. Nov 19th, 2025



அக்டோபர் 20, கன்னியாகுமரி மாவட்டம்:
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவில், கீழ்குளம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட கீழ்குளம் ஜங்ஷன் முதல் இனையம், புத்தன்துறை செல்லும் சாலை (சின்னத்துறை வழியாக) தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த சாலையில் தினசரி மார்த்தாண்டம் அரசு பேருந்துகள், கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்கள், பொதுமக்கள், இருசக்கர வாகனங்கள், முதியோர், சிறுவர்கள் என பலர் பயணிக்கின்றனர். ஆனால் சாலை முழுவதும் பள்ளங்கள், சேறும், மழைநீர் தேக்கமும் நிலவி வருவதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சிறப்பாக, மழைக்காலங்களில் நீர் தேக்கம் காரணமாக அருகிலுள்ள கடைகள், மருத்துவமனை, கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரவும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

இதையடுத்து, இனையம் – புத்தன்துறை நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நெடுஞ்சாலை துறை, கீழ்குளம் பேரூராட்சி, இனையம் புத்தன்துறை ஊராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை செப்பனிடல் மற்றும் நீர் தேக்கம் நீக்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

📸 புகைப்படம் மற்றும் பதிவு:
20.10.2025 — கனமழை பெய்தபோது எடுத்த புகைப்படம் மற்றும் தகவல்.

அறிக்கை: ஷேக் முகைதீன்

By TN NEWS