அக்டோபர் 21, குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட கூடநகரம் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை சார்ந்த ஏரி, சமீபத்திய மழையால் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதையொட்டி, மகிழ்ச்சியின் அடையாளமாக ஊராட்சி மன்ற தலைவர் பி. கே. குமரன் தலைமையில் ஏரிக்கரையில் மலர் தூவி பூஜை நடைபெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜி. வெங்கடேசன், பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் சிவாஜி, ஊர் பெரியோர்கள் கோபி, தர்மகர்த்தா, பண்ணை கோபி, ஜவகர் வி. வெங்கடேசன், சக்கரவர்த்தி, அனகாநல்லூர் தேவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
செய்தி: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
