Thu. Nov 20th, 2025




வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். ரோட்டில், அம்பேத்கர் சிலை அருகிலுள்ள அன்னாள் முதியோர் இல்லத்தில் தீபாவளி திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் கலந்து கொண்டு, முதியோர்களுக்கு புடவை மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.

அவருடன் உதவி ஆய்வாளர்கள் வீராசாமி, ராஜேஸ்வரி, தலைமை காவலர் வேண்டா, பல்வேறு காவலர்கள் மற்றும் முதியோர் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS