வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் இன்று (அக்.18) மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததால், அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக வங்கதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAB) தெரிவித்துள்ளது.
இந்தி காரணமாக 36-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தீ குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆரம்ப கட்ட தகவலின்படி “இரவு 2:30 மணியளவில் சரக்கு பகுதியில் தீப்பற்றி எரிந்தது” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்
