வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 18 –
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம் நகராட்சியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிலர் தனிப்பட்ட இடங்களிலும் வீடுகளிலும் ஆடுகளை அறுக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் முற்றிலும் சட்ட விரோதமானவை என்று குடியாத்தம் நகராட்சி அறிவித்துள்ளது.
நகராட்சி செய்தியறிக்கையில்,
“ஆடுகளை அறுக்கும் நடவடிக்கை குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான சுண்ணாம்புபேட்டை பகுதியில் இயங்கும் ஆடு அறுக்கும் சாலையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இதை மீறி வேறு இடங்களில் அறுக்கும் நபர்களுக்கு எதிராக நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டவிரோத இடங்களில் அறுக்கப்பட்ட இறைச்சி பறிமுதல் செய்யப்படும். மேலும், தொடர்புடைய இறைச்சிக் கடைக்காரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொது சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.
இங்ஙனம்,
ஆணையாளர் மற்றும் பொது சுகாதார பிரிவு,
குடியாத்தம் நகராட்சி.
செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா
