1949 செப்டம்பர் 17 — வரலாற்று நாள்:
சென்னை இராயபுரம் ராபின்சன் பார்க் மைதானத்தில் திமுகவின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காலை அமைப்புக் குழு கூட்டம் முடிந்ததும், மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா துவக்க உரையை ஆற்றினார்.
அன்று அண்ணா கூறிய முக்கியமான கருத்துக்கள்:
“திராவிடர் கழகத்துக்கு போட்டியாக அல்ல, அதே கொள்கைப் பாதையில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியுள்ளது.
சமுதாய சீர்திருத்தம், பொருளாதார சமதர்மம், அரசியல் விடுதலை — இவையே எங்கள் மூன்று தூண்கள்.”
“பெரியாரே என் தலைவர். வேறு யாரின் கீழும் நான் பணியாற்றியதில்லை, செய்யவும் மனம் வராது.
அதனால் தான் எங்கள் கழகத்தில் தலைவருக்கான நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டுள்ளது.”
“திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், படை வரிசை வேறு, ஆனால் கொள்கை ஒன்றே.
வடநாட்டு ஏகாதிபத்யத்தையும் வைதீக அடக்கு முறையையும் எதிர்த்து, சமதர்மப் பூங்காவை வளர்த்திட வேண்டும்.”
“பகை உணர்ச்சியை விட்டு விடுங்கள். கொள்கை பரப்புவதே முதல் பணி. எழுத்துரிமை, பேச்சுரிமை பறிக்காதே என்ற கோஷத்தோடு நாம் போராடுவோம்.”
“மரம் அழியவில்லை — அதிலிருந்து ஓட்டுமாஞ்செடி தோன்றியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் அதுவே!”
அந்நாளின் கடும் மழையிலும் உற்சாகமாக உரையாற்றிய அண்ணா, “முக்கியமாக…” என்ற வீர முழக்கத்தோடு தன் உரையை முடித்தார்.
📚 மூலம்: திமுக வரலாறு – டி. எம். பார்த்தசாரதி
(பதிப்பு: கோவி லெனின்)
📖 பகிர்வு: ஸ்வாமிநாதன் ரெங்கசாமி
🖋️ தகவல் தொகுப்பு: சேக் முகைதீன், இணை ஆசிரியர்
