பள்ளி வளர்ச்சிக்காக சொந்த நிலம் தானம் — வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் ரைஹானா ஜாவித் உயரிய சமூகப் பணி.
திருநெல்வேலி மாவட்டம், அக்டோபர் 14, 2025:
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்தின் ஆனைகுளம் ஊராட்சி துலுக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் திருமதி ரைஹானா ஜாவித் அவர்கள், தம் சொந்த நிலத்தை பள்ளி வளர்ச்சி மற்றும் ஊர்மக்கள் பயன்பாட்டிற்காக தானமாக வழங்கியுள்ளார்.
பள்ளிக்கூடம் விரிவாக்கம் மற்றும் யூனியன் சாலைக்கு இணைந்த பாதை அமைப்பதற்காக, சுமார் ₹1 கோடி 15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை, தன்னுடைய சொந்த செலவில் பத்திரப்படுத்தி, பஞ்சாயத்துக்கு அளித்துள்ளார்.
இது தொடர்பாக, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜனாப் ஹக் பாய், பள்ளி தலைமை ஆசிரியர் செபின் அருள், மற்றும் ஆனைகுளம் பஞ்சாயத்து தலைவர் அசன் மைதீன் ஆகியோர் இணைந்து, பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பாதை வசதி தேவை என தெரிவித்து, கவுன்சிலர் ரைஹானா ஜாவித் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
பள்ளியின் நலனையும், எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, கவுன்சிலர் ரைஹானா ஜாவித் அவர்கள் உடனடியாக சம்மதித்து, தன்னுடைய சொந்த நிலத்தை சமூக நலனுக்காக பத்திரம் செய்து அளித்துள்ளார்.
பத்திர பதிவு சுமார் ₹60,000 செலவில், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் உயர்திரு. அப்பாவு அவர்களின் முன்னிலையில், வள்ளியூர் பத்திர பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த உயரிய சமூகப் பணி, ஊர்மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கல்வி ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
📜 இவ் விழிப்புணர்வு செயலின் மூலம், வள்ளியூர் ஒன்றியக் கவுன்சிலர் ரைஹானா ஜாவித் அவர்கள், கல்வி மேம்பாட்டில் பெண்களின் பங்கு மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
🗞️ தயாரிப்பு:
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்

✨ சேக் முகைதீன் அவர்களின் பாராட்டு வரிகள்:
“சமூக முன்னேற்றம் மனதாரும் மனுஷ்யத்தாரும் கொண்டவர்களின் செயலில் உருவாகிறது.”
இந்த அருமையான செயலைச் செய்த வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் திருமதி ரைஹானா ஜாவித் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும்.💐💐💐
சேக் முகைதீன்
துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்
