வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 11:
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், IPS அவர்களின் உத்தரவுப்படி, மாவட்ட அலுவலர் தலைமையில் நடைபெற்றது. குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
“வாங்க கற்றுக்கொள்வோம் – தீ பாதுகாப்பை அறிவோம்” என்ற தலைப்பில் தீ விபத்து ஏற்படும் சூழலில் எவ்வாறு முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும், தீ விபத்து ஏற்பட்டால் உடனடி மீட்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கவுரைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை பணியாளர்கள், பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
