தருமபுரி மாவட்டம், அரூர் அருகே மாம்பாடி:
மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வேப்பம்பட்டி பொன்னேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
பொன்னேரி ஊராட்சி பல்நோக்கு கட்டிட வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தை ஊராட்சி செயலாளர் முரளிதரன் தலைமையில் நடத்தினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிழக்கு ஊராட்சி), வாக்காளர் பிரதிநிதிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர், மகளிர் குழு செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பினர்கள், ஆண்கள் சுய உதவி குழுவினர்கள், பல துறை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், பனிதள பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.
கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவை:
1️⃣ குப்பை இல்லா ஊராட்சி உருவாக்கல்
2️⃣ தண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்பது
3️⃣ மக்கும் குப்பை – மக்கா குப்பை பிரித்தெடுத்தல்
இதனை ஒருமனதாக உறுதிமொழியாக அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
செய்தி: பசுபதி