Thu. Nov 20th, 2025

📢 தமிழ்நாடு டுடே ஸ்பெஷல் ரிப்போர்ட்🚨


🌟 துலுக்கர்பட்டியில் கல்வி வளர்ச்சிக்கு புதிய அடிக்கல்!

₹1 கோடி 78 லட்சம் 44 ஆயிரம் மதிப்பில் புதிய வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் கட்டிடம் – சமூக ஒற்றுமையின் வெற்றி!

“போற்றுவோர் போற்றட்டும்… தூற்றுவோர் தூற்றட்டும்!”
துலுக்கர்பட்டி மக்களின் உறுதியான குரல்…!

துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி , ஒருகாலத்தில் மாணவர்கள் மரத்தடியில், படிக்கட்டுகளில் பாடம் படித்த பள்ளி. இன்று கல்வி வளர்ச்சியின் புதிய பக்கத்தைத் திறந்திருக்கிறது.

₹1,78,44,000 மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் ஆகிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை தலைவர் திரு. மு. அப்பாவு அவர்கள், வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் திருமதி S. ரைஹானா ஜாவித், ஊராட்சி மன்ற தலைவர் M. அசன் மைதீன், பள்ளி தலைமை ஆசிரியர் செபின் அருள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

🔍 மூன்று ஆண்டுகளின் நீண்ட போராட்டத்தின் பலன்!

மூன்று வருடங்களுக்கு முன்பு, பள்ளியை ஆய்வு செய்த யூனியன் கவுன்சிலர் திருமதி ரைஹானா ஜாவித், மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலையை நேரில் கண்டார்.
போதுமான வகுப்பறைகள் இல்லாததையும், கழிவறை வசதி மோசமாய் இருந்ததையும் ஆசிரியர்கள் விளக்கினர்.

அவர் உடனடியாக மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பி, கல்வித் துறைக்கு மனு அனுப்பினார்.
அந்த மனுவிற்கு ஆரம்பத்தில் (JD) சுசீலா மடம் “இடம் இல்லை” என பதில் அளித்தார்.

ஆனால், அதில் நின்றுவிடாமல், பெற்றோர்-ஆசிரியர் கழகம் இணைந்து, இடம்சார்ந்த தீர்வு காண முயற்சி செய்தது.
இறுதியில் கல்வித் துறை ₹1.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது — இதுவே இன்றைய நிகழ்வாக மாறியது.

🏫 புதிய கட்டிடத்தின் விவரம்:

6 புதிய வகுப்பறைகள்

3 கூடுதல் வகுப்பறைகள்

2 கழிவறைகள்

சுற்றுச்சுவர் அமைப்பு


“இப்போது 30 சென்ட் நிலம் கிடைத்தால், பள்ளி முழுமையான கல்வி வளாகமாக மாறும்,” என ரைஹானா ஜாவித் அவர்கள் கூறினார்.
மேலும், “நான் முதலில் ₹1 லட்சம் நிதி வழங்குகிறேன். ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும்,” என உறுதியளித்தார்.

💬 ஊர் மக்களின் பெருமை!

நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்கள், “இது நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கான முதலீடு. கல்வி வளர்ச்சிக்கு ஒற்றுமையுடன் நின்ற நம் தலைவர்களுக்கு நன்றி,” எனக் கூறினர்.

🌿 தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க் சிறப்பு குறிப்பு:

“கல்விக்காக களமிறங்கும் ஒவ்வொரு ஊரும் நாளைய தலைமுறையின் ஒளி.
துலுக்கர்பட்டி அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.”


M.Shaikh Mohideen – Associate Editor
Tamilnadu Today Media Network.

#TamilnaduTodayMediaNetwork,#Appavu M.LA,#EducationDepartment,#TirunelvellyCollector,#Valliyoor,#TamilnaduCMO,

By TN NEWS