📍 வேலூர் மாவட்டம், அக்டோபர் 10
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், மலட்டாறு ஓரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வீதிகளிலும் வீடுகளிலும் புகுந்தது.
நிலவிய நிலையை நேரில் பார்வையிட குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வி. அமலு விஜயன், குடியாத்தம் கோட்டாட்சியர் திரு. சுபலட்சுமி, மற்றும் நகர கழக செயலாளர், நகர மன்ற துணைத் தலைவர் ஜனாப். ஆலியார் ஜூபேர் அஹ்மத் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அவர்களுடன் நகர மன்ற தலைவர் திருமதி. பிரேமா வெற்றிவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆலியார் அர்ஷத் அஹ்மத், வட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல், நகர மற்றும் வார்டு கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.
மழை பாதிப்பு ஏற்பட்ட வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, சாலைகளில் ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட விவரங்களை சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் நேரில் ஆய்வு செய்து, உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
📰 செய்தி: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்