Thu. Nov 20th, 2025

முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீ சீனிவாசா நாற்றுப்பண்ணை பயிற்சி முகாம் ஆய்வு


அரூர், அக்டோபர் 8:
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழில்கல்வி மற்றும் வேளாண் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்காக ஸ்ரீ சீனிவாசா நாற்றுப்பண்ணை (H. தொட்டம்பட்டி) சார்பில் நடத்தப்பட்ட உள்ளுறை (In-house) பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாமை மாண்புமிகு முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஜோதி சந்திரா அவர்கள் நேரில் ஆய்வு செய்து, மாணவர்களையும் நாற்றுப்பண்ணை பயிற்சியாளர்களான டாக்டர் ராம் பிரசாத் மற்றும் திருமதி தவ நிலா ஆகியோரை ஊக்குவித்து பாராட்டுரை வழங்கினார்.

அவருடன் ஆய்வு அலுவலர் பொன்னுசாமி, தொழில்கல்வி ஆய்வாளர் திரு. சுரேஷ், தலைமை ஆசிரியர் திரு. ஆறுமுகம், மற்றும் ஆசிரியர்கள் சரவணன், குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்முகாம் மூலம் மாணவர்கள் நடைமுறை வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அனுபவங்களை கற்றுக்கொண்டு, துறையில் தன்னம்பிக்கையுடன் முன்னேற வாய்ப்பு பெற்றுள்ளனர்.

🖋️ செய்தியாளர்: பசுபதி
📍 இடம்: அரூர்

By TN NEWS