Thu. Nov 20th, 2025


ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை சார்பில் ஆன்மீக நிகழ்வு – பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்!

குடியாத்தம், அக்டோபர் 8:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை சார்பில் இன்று காலை 11 மணியளவில் கெளண்டன்ய மகாநதி புஷ்கரணி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் த. பாபு சிவம் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்வில், அறக்கட்டளை செயலாளர் மற்றும் சமூக சேவகி திருமதி ராதிகா பாபு, அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் மாசி கார்த்தி, நிர்வாகிகள் வடிவேல், மகேஷ், மணிமாறன், பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆர். அண்ணாமலை அவர்கள் நன்றி தெரிவித்தார்.

விழாவின் போது யோகபவானி அம்மனுக்கு 21 வகையான மூலிகை பொடிகள் கொண்டு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

நாட்டின் ஆன்மீக ஒற்றுமையையும் சமூக சேவையையும் இணைத்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

🖋️ செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
📍 இடம்: குடியாத்தம்

By TN NEWS