Sun. Oct 5th, 2025



வேலூர், அக்டோபர் 5:
வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுக்குழு உறுப்பினர், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம், வேலூர் மாவட்ட தலைவர் சரகுப்பம் மு.சேகர் அவர்கள் தலைமையில், போஜனாபுரம் ஊராட்சி திரு வி.ராஜி மற்றும் மேல்முட்டுக்கூர் ச.பார்த்தீபன் ஆகியோர் இணைந்து இன்று (05.10.2025) மாண்புமிகு தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.

இந்த மனுவில், குடியாத்தம் வட்டார போஜனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச் சுவர், நோயாளிகள் காத்திருப்பு அறை, கழிவறை, பேவர் பிளாக் தரை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கனிமங்கள் மற்றும் சுரங்கவளம் திட்டத்தின் கீழ் ரூ.49,88,000/- மதிப்பில் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வரும் 06.10.2025 அன்று பெருந்தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ள கனிம வளம் அறக்கட்டளை நிர்வாக குழு கூட்டத்தில் இக்கோரிக்கையை பரிந்துரைக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது.

கர்ப்பிணி தாய்மார்கள், பிரசவ கால தாய்மார்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் சுகாதார நிலைய பணியாளர்கள் நலன் கருதி இக்கோரிக்கை மிக முக்கியமானதாகும் எனவும், அதனை நிறைவேற்ற உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இக்கோரிக்கையை அன்புடன் ஏற்று நடவடிக்கை எடுக்க உறுதி அளித்த மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் விவசாயிகள் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS