Sun. Oct 5th, 2025



சென்னை:
இந்திய தேர்தல் ஆணையம், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

ஆனால் சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 10 அரசியல் கட்சிகள் —

அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம்

கிறிஸ்துவ ஜனநாயக முன்னணி

ஜெபமணி ஜனதா

காமராஜர் தேசிய காங்கிரஸ்

மக்கள் சக்தி கட்சி

என் இந்தியா கட்சி

புதிய தமிழகம்

இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்)

தமிழக முன்னேற்ற காங்கிரஸ்

வளமான தமிழக கட்சி


இவை 2021-22, 2022-23, 2023-24 ஆகிய மூன்று நிதியாண்டுகளுக்கான வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை என்று பதிவுகளில் தெரிகிறது.

மேலும், தேர்தல் செலவின அறிக்கைகளும் உரிய படிவத்தில் தாக்கல் செய்யப்படாததால், இந்தக் கட்சிகளை பதிவு பட்டியலிலிருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.

இந்நிலையில், இறுதி நடவடிக்கைக்கு முன் அந்த 10 கட்சிகளுக்கும் “காரணம் கேட்கும் அறிவிப்பு” (Show Cause Notice) அனுப்பப்பட்டு, தங்கள் கருத்துகளை எழுத்துப்பூர்வமாகவும், ஆவணங்களுடனும் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் முன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதிக்குள் பதில் வரவில்லை என்றால், அந்தக் கட்சிகளுக்கு மேலதிக பதிவு தேவையில்லை எனக் கருதி, இறுதி முடிவு இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேக் முகைதீன்

By TN NEWS