செப்டம்பர் 29, குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காளியம்மன் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப் பணி திட்ட முகாமின் மூன்றாம் நாள் நிகழ்வில் “நாடு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு” என்கிற தலைப்பில் முன்னாள் மாவட்ட தொடர்பு அலுவலர் டி.எஸ். விநாயகம் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் கா. செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
திட்ட அலுவலர் முனைவர் தமிழ். திருமால் வரவேற்புரை ஆற்றினார்.
முதுகலை ஆசிரியர்கள் என். சக்திவேல், எஸ். கமலஹாசன், திருமதி வனிதா, திருமதி சித்ரா, திருமதி ராஜலக்ஷ்மி ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினர்.
உதவி திட்ட அலுவலர் சத்தியசீலன் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.
7 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் பல்வேறு சமூக நலப்பணிகள் இடம்பெறவுள்ளன.
✍️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – K.V. ராஜேந்திரன்