இரங்கல் :
லதா ரஜினிகாந்த், நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “கரூர் கண்ணீர் கடலாய் மாறியுள்ளது” என பதிவிட்டார்.
அரசியல் தலைவர்களின் கருத்துகள் :
எம்.எல்.ஏ. வேல்முருகன் – “விஜய் மீதும், ரசிகர்கள் மீதும், சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள்மீதும் தவறு உள்ளது”.
அண்ணாமலை – “விஜய் தான் முதல் குற்றவாளி”.
ஷாநவாஸ் (விசிக) – “களத்தில் நிற்காமல் கட்சி நிர்வாகம் ஓடியது”.
டிடிவி தினகரன் – “இந்தச் சம்பவத்தில் அரசியல் பேச விரும்பவில்லை”.
துரை வைகோ – “மக்களுக்கு விழிப்புணர்வு தேவை”.
பிரேமலதா – “விஜய்க்கு மட்டும் பாதுகாப்பு போதாது; மக்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்”.
திருமாவளவன் – “யாரும் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்”.
விசாரணை & வழக்குகள் :
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை தொடங்கியது.
காயமடைந்த கண்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு – “பாதுகாப்பின்றி விஜய் கூட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது”.
உயர்நீதிமன்றம் – “சிபிஐ விசாரணை மனுவை அவசர வழக்காக ஏற்க முடியாது”.
தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை கோரி மனு.
ஆளுநர் ஆர்.என். ரவி – முதல்வரிடம் அறிக்கை கேட்டார்.
அரசு / காவல்துறை விளக்கம் :
ஏடிஜிபி தேவாசீர்வாதம் – “விஜய் தாமதமாக வந்ததால் நெரிசல் அதிகரித்தது; காவல்துறை போதுமான பாதுகாப்பு அளித்தது”.
காவல்துறை – “விஜய் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாததால் பிரச்சனை அதிகரித்தது”.
TNEB – “கரூரில் மின்தடை இல்லை”.
முக்கிய அம்சங்கள்:
ஐ.ஜே.கே. பாரிவேந்தர் – “உயிரிழந்தோரின் குடும்ப மாணவர்களின் கல்விச்செலவுகளை SRM கல்விக் குழுமம் ஏற்கும்”.
விஜய் – ராகுல்காந்தி தொலைபேசி உரையாடல்.
ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் விஜய் 3 மணி நேர ஆலோசனை.
கனிமொழி – வீடு வீடாகச் சென்று ஆறுதல்.
சீமான் – மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்.
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.