கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, பட்டா மாற்ற நடவடிக்கைக்காக லஞ்சம் பெற்றதாக பெண் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர் (வி.ஏ.ஓ) ஒருவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன் (50), புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டுமனைக்கு பட்டா மாற்றம் செய்து தர கோரி விண்ணப்பித்திருந்தார். இதில் நடவடிக்கை எடுக்க, அங்கு பணிபுரியும் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த வி.ஏ.ஓ. கோமதி (38), 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக பொன்னையன் புகார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், துணைக் காவல் கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையில் களமிறங்கினார்கள். புகார் அளித்தவரிடம் இருந்து ரசாயனம் தடவிய 4,000 ரூபாயை பெற்று, அதை வி.ஏ.ஓ. கோமதிக்குக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பட்டா மாற்ற நடவடிக்கைக்காக ரூ.4,000 பெற்றவுடன், கோமதி பணத்துடன் கையும் களவுமாக பிடிபட்டார். அவரது கைரேகையும் குறித்த பணத்தில் பதிந்ததால், போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
V. ஜெய் ஷங்கர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தலைமை செய்தியாளர்