ஜிஎஸ்டி வரி குறைப்பால் டிவி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளது: பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன்.
ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது என்று பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“ரேஷன் கடையில் வழங்கும் அனைத்து பொருட்களும் ஒன்றிய அரசு வழங்குகிறது. ஜிஎஸ்டி என்பது மத்திய அரசு விதிக்கும் வரி அல்ல. மாநில நிதி அமைச்சர்களே அதில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களே யாருக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள்.
பிரதமர் மோடிக்கு மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில், 28 சதவீத வரியை நீக்கி விட்டனர். 12 சதவீத வரியில் இருந்த 90 சதவீத பொருட்களுக்கு 5 சதவீதமாக குறைத்தனர். சில பொருட்களுக்கு 5 சதவீதத்தில் இருந்து 0 சதவீதமாகக் குறைத்துள்ளனர்.
முன்பு டிவி, கிரைண்டர் போன்றவற்றுக்கு 28 சதவீத வரி இருந்தது. இப்போது அது 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களுக்கு 50 சதவீத பங்கு இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் மீதமுள்ள தொகையிலிருந்து தான் தேசிய நெடுஞ்சாலைகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம், ரேஷன் பொருட்கள், கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நடைபெறுகிறது. இவை அனைத்தும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவே ஆகும்,” என அவர் கூறினார்.
பத்திரிகையாளர் சந்திப்பு:
“எனக்கும் அண்ணாமலைக்கும் சண்டையை மூட்டி விடாதீர்கள்”: நைனார் நாகேந்திரன்.
பாஜகத் தலைவர் யார்? அண்ணாமலைதானா? நைனார் நாகேந்திரன்தானா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
“இந்த கேள்வியே தவறானது. எங்களுக்குள் சண்டையை மூட்டும் விதத்தில் இத்தகைய கேள்விகள் கேட்கப்படக் கூடாது.
வரும் அக்டோபர் 6ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகிறார். அவர் ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். மேலும், இனி சென்னையில் நடைபெற உள்ள அனைத்து போராட்டங்களுக்கும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமை ஏற்கவுள்ளார்,” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.