தேனி மாவட்டம் சின்னமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு “100 நாள் 100 ரேஷன் கடை” ஆர்ப்பாட்டம் இன்று (22.09.2025, திங்கட்கிழமை) 78வது நாளாக நடைபெற்றது.
அதேபோல், சின்னமனூர் ரேஷன் கடை முன்பு 79வது நாளாக பாமாயிலை தடை செய்து, அதன் பதிலாக தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெயை ரேஷன் கடைகளிலும் சத்துணவு கூட்டங்களிலும் வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ. கே. சண்முகம், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர். மயில்சாமி, மாநில பிரச்சாரக் குழுத் தலைவர் மணி, மாநில துணைச் செயலாளர் பி. பாலு குட்டி, தேனி மாவட்டத் தலைவர் எஸ். சிவனாண்டி, செயலாளர் பிரண்ட்ஷிப் சேவியர், பொருளாளர் பி. பாலு பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சின்னமனூர், கோம்பை, கூடலூர் பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகளும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி தேனி மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தது.
சேக் முகைதீன், இணை ஆசிரியர்