குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மீனூர்மலை வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
மூலவர் வெங்கடேச பெருமாள் ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் “கோவிந்தா! கோவிந்தா!” என கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்