Sun. Oct 5th, 2025




வேலூர் மாவட்டம் குடியாத்தம், கொண்டசமுத்திரம் புது தெருவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி 101ஆம் ஆண்டு பெருவிழா நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு வேணுகோபால சுவாமி பஜனை கோயிலில் இருந்து நரசிம்மர் சாமி திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, ஊர் பெரியதனம் கே. எம். நடராஜன் இல்லத்தில் வந்து சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மீண்டும் இரவு 7 மணிக்கு கே. எம். நடராஜன் இல்லத்திலிருந்து நரசிம்மர் சாமி ஊர்வலம் வானவேடிக்கையுடன் நடைபெற்று, வேணுகோபால சுவாமி பஜனை கோயிலில் வந்து சேரும். அங்கு அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

இவ்விழாவின் ஏற்பாடுகளை ஊர் பெரியதனம் கே. எம். நடராஜன், மகேஸ்வரி மற்றும் குமரவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS