Sun. Oct 5th, 2025

சென்னை:
இந்தியாவில் தமிழ்நாடு தமிழர்கள் இணைந்து உலகிலேயே முதன்முறையாக, தண்ணீரை அடுப்பெரிக்கும் இயந்திரம் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் ஆலையில் நடைபெற்ற நேரடி செயல்விளக்கத்தில், HONC Gas Generator பற்றிய புரட்சிகரமான கண்டுபிடிப்பு செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

✅ புதிய கண்டுபிடிப்பு – உலகிற்கு தமிழ்நாட்டின் பரிசு:

இந்த தொழில்நுட்பம், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரிலிருந்து நேரடியாக பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி செய்யக்கூடியது.

மேம்பட்ட Gyroid Electrolytic Medium (GEM) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

LPG அல்லது பிற எரிபொருட்களைப்போல் சேமிப்புத் தொட்டிகள் தேவையில்லை.

கசிவு, வெடிப்பு அபாயமின்றி நமக்குத் தேவையான நேரத்தில் நேரடியாக உற்பத்தி செய்யக்கூடியது.


🗣 நிறுவனர் பேச்சு:

நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி திரு. பேளூர் ராமலிங்கம் கார்த்திக் அவர்கள்,

“வெறும் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் குறைந்த மின்சாரம் போதுமானது. தொழிற்சாலைகள், வீடுகள், வாகனங்கள் என அனைத்து துறைகளுக்கும் பாதுகாப்பான, மாசற்ற எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும். மின்சார உற்பத்திக்கும் கூட பயன்படுத்தலாம்” என்றார்.


👨‍💼 நிர்வாகக் குழு:

இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள்:

முதன்மை செயல் அதிகாரி திரு. முத்துக்குமாரசாமி முத்துரத்தினம்

மேலாண் இயக்குநர் திரு. செந்தில் குமார்

இணை மேலாண் இயக்குநர் திருமதி. பூரணசங்கீதா செந்தில் குமார் பிச்சை

அரசியல் தலைவர், தயாரிப்பாளர், நடிகர் திரு. R. சரத்குமார்


🎉 சிறப்பு விருந்தினர்கள்:

ராம்ராஜ் காட்டன் தலைவர் S.R. நாகராஜன்,
வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் S.K.Y. சுந்தர்ராஜன்,
ஹீரோ பேஷன் நிறுவனத்தின் S. சுந்தரமூர்த்தி,
மேலும் பல தொழில்துறை நிபுணர்கள் கலந்து கொண்டு பாராட்டுத் தெரிவித்தனர்.

🌱 எதிர்கால இலக்கு:

இந்த கண்டுபிடிப்பு,

சமையல் எரிவாயு,

தொழிற்சாலைகளுக்கான பாய்லர்கள்,

பெரிய எரிசக்தி உற்பத்தி கூடங்கள்,

வாகன எரிபொருள் துறை


என அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. இந்தியாவை பசுமை எரிசக்தி துறையில் உலக முன்னணியில் நிறுத்துவதே இலக்கு என நிறுவனம் தெரிவித்துள்ளது.


👑 தமிழ்நாடு, புதிய கண்டுபிடிப்புகள்,

#GreenEnergy #TamilNaduInnovation #HONCGas

சேக் முகைதீன்

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.

 

By TN NEWS