Sun. Oct 5th, 2025

பாப்பிரெட்டிப்பட்டி – “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடத்தப்பட்டது

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், இருளப்பட்டி சமுதாய கூடத்தில் மூன்றாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டது.

மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் மண்டல பொறுப்பாளர், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டியுள்ளார்.

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன், M.Sc, PhD முகாமை தொடங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார்.

நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் சி. முத்துக்குமார், மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், வருவாய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

பசுபதி,
செய்தியாளர்

By TN NEWS