விழுப்புரம் மாவட்டம் – ஸ்டாலின் முகாம்: பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் செவலபுரை ஊராட்சியில் ஸ்டாலின் முகாம் நடைபெற்று, பொதுமக்களுக்கு மனுக்கள் எடுத்துக் கொடுத்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
முகாமை மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமையில், வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர்களும் வரவேற்று நடத்தியனர்.
முகாமில், ஆரம்ப சுகாதார மருத்துவமனை சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்கத்தினை வழங்கி, ரத்த அழுத்தம் மற்றும் நீர் கழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மாத்திரை அட்டை வழங்கப்பட்டது.
மேலச்சேரி, செவலபுரை, தாதிகுளம், சித்தாதூர், தாதங்குப்பம், ஈயக்குனம், ஏம்பலம் ஊராட்சிகள் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் குடும்ப அட்டை மனுக்களை கொடுத்தனர்.
கே. மாரி,
விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர்