18 செப்டம்பர் 2025 | வேலூர்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வன்னியர் சங்கம் சார்பில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்காக வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கிஷோர் தலைமையிலான சங்க பொறுப்பாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். வழக்கறிஞர் குமார் அரவிந்தன், பழனி, மேகநாதன், மனோஜ், சரத், குமாரசாமி, அசோக், ஆனந்தராஜ், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலம்பாட்டம் நிகழ்த்தியதுடன், 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வண்ணக்க நிகழ்ச்சிக்கு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயில் டிரஸ்ட்சின் சார்பில் ஆதரவு அளிக்கப்பட்டது.
K.V.Rajendran
குடியாத்தம்