விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 147வது பிறந்தநாளையொட்டி இன்று கீழப்பாவூரில் சிறப்பு மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் எம். பி. பாக்யராஜ் தலைமையில் நிகழ்ச்சியில் பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் விசிக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கீழப்பாவூர் ஒன்றிய பொறுப்பாளர் விஏ நகர் ராஜா, கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கழநீர்குளம் பாபுவாசன், ஆலங்குளம் ஒன்றிய பொறுப்பாளர் புதுப்பட்டி வேல்முருகன், மாவட்ட துணை அமைப்பாளர் வி. சந்திரமோகன், கீழப்பாவூர் ஒன்றிய துணைச் செயலாளர் பி.எம்.சாமிஆகியோர் ஆகியோர் நிகழ்ச்சியில் நேரில் கலந்து பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.
“தந்தை பெரியார் எப்போதும் சமத்துவம், உரிமை, சமூக நீதியின் சின்னமாக இருந்து வருகிறார். அவரது வாழ்க்கை, கொள்கைகள் எப்போதும் எங்களுக்கு வழிகாட்டும்,” என மாவட்ட அமைப்பாளர் எம். பி. பாக்யராஜ் கூறினார்.
தந்தை பெரியார், சமூக சீர்திருத்தம், மறுநவீன சமத்துவக் கொள்கைகள் மற்றும் மத சுயாதீனத் தத்துவத்தின் முன்னோடியாகத் தமிழ்நாட்டில் புகழ்பெற்றவர். அவரது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சமூகநீதி, சமத்துவம் போன்ற கருத்துக்களை நினைவுகூரும் நிகழ்வுகளாகக் கொண்டாடப்படுகிறது.
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்