செப்டம்பர் 16, குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 9-வது வார்டு திருஞானசம்பந்தர் தெரு, பக்கிரி முகமது தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நீர்வழி பாதையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியுள்ளனர்.
அப்பகுதியில் சுமார் 11 அடி அகலமுள்ள ஏரி கால்வாய் உள்ளது. ஆனால், சிலர் அந்த கால்வாயை ஆக்கிரமித்திருப்பதால் கழிவுநீர் மற்றும் மனித கழிவுகள் சாலையில் வழிகிறது. இதனால் சுகாதார சீர்கேடு உருவாகி, துர்நாற்றம் பரவி வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு பெய்த மழையால் அந்தப் பகுதி சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
“கடந்த 5 ஆண்டுகளாக பல முறை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் கூறினர்.
நீர்நிலை பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்