Sun. Oct 5th, 2025

 


குடியாத்தம், செப்டம்பர் 12:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாக்கம் பஸ் நிலையம் பகுதியில், தமிழக அரசின் டாஸ்மாக் மது பாட்டில்கள் கள்ளச் சந்தையில் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவதாக பரதராமி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி போலீஸார் இன்று பாக்கம் பஸ் ஸ்டாப்பில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் குடியாத்தம் அருகே சேங்குன்றம் கிராமம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பிராஜ் (54), மாசிலாமணி மகன் என தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 36 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS