குடியாத்தம், செப்டம்பர் 12:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்க உறுப்பினர் என்.சி. ஸ்ரீதர் அவர்களின் பாட்டி (தந்தையின் தாயார்) எம். சாலம்மாள் (வயது 95) இன்று விடியற்காலையில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதலுடன், மறைந்த சாலம்மாளின் கண்கள் வேலூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
சங்க பொருளாளர் என். ஜெயச்சந்திரன் அளித்த முதல் தகவலின் பேரில், சங்க கண்–உடல் தானக் குழு தலைவர் எம்.ஆர். மணி உரிய ஏற்பாடுகளை செய்தார்.
சங்க RCC இயக்குனர் எஸ். பிரேம்குமார் உடனிருந்து தேவையான உதவிகளை வழங்கினார்.
இத்தகைய உயர்ந்த செயலின் மூலம் சாலம்மாளின் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் வகையில், மற்றவர்களும் கண்–உடல் தானத்தில் பங்கேற்க வேண்டுமென்று ரோட்டரி சங்க நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்