குடியாத்தம், செப்டம்பர் 12:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.
வேளாண்மை துறை உதவி இயக்குநர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்.
நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமானவை:
கொத்தபல்லி – பேரணாம்பட்டு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அவற்றை சீரமைக்க வேண்டும்.
பேரணாம்பட்டு கானாற்று பகுதியில் ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட வேண்டும்.
கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டியில் கடந்த இரண்டு மாதங்களாக யூரியா கிடைக்கவில்லை; உடனடியாக வழங்க வேண்டும்.
சத்துணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோட்டாட்சியர் அலுவலக கூட்டங்களில் விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி மையம், மேலாளத்தூர் கரும்பு ஆராய்ச்சி மையம், மண் ஆராய்ச்சி மையம் அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன், துணை வட்டாட்சியர் மஞ்சுநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, கே.வி.குப்பம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அம்சவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விவசாய பிரதிநிதிகள் சம்பத் நாயுடு, சாமிநாதன், துரைசெல்வம், சேகர், பழனி, வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.
மொத்தம் 13 அரசு துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்