அமெரிக்காவின் B-52 ஸ்ட்ராட்டஜிக் பாம்பர் உலகையே நடுங்கச் செய்ததாக அவர்களே பெருமைபேசி வருகின்றனர். உலகின் எந்த நாட்டிற்கும் இதை விற்காத ஒரே போர் விமானம் என்பதும், லட்சக்கணக்கான கிலோ குண்டுகளை தாங்கிச் செல்லும் சக்தி கொண்டதுமாக இருப்பதே அதற்கான காரணம்.
இந்த விமானத்தின் மிகப் பெரிய ரகசியம், ரேடாரால் கண்டுபிடிக்க முடியாத “ஸ்டெல்த் தொழில்நுட்பம்”. ரேடியோ கதிர்களை முழுமையாகத் தன்னுள் விழுங்கிக் கொள்ளும் ஆற்றலால், எதிரி நாடுகளின் ரேடார்கள் இதனை அடையாளம் காண முடியாது. “கண்ணுக்குத் தெரியும் நேரத்தில் பணியை முடித்துவிட்டு திரும்பி விடும்” என்பதே இதன் அச்சுறுத்தலான சிறப்பு.
🔎 ரேடார்களின் அடிப்படைச் செயல்பாடு
விமானங்களை அடையாளம் காணும் நவீன ரேடார்கள் மூன்று வகையாக உள்ளன:
1. ரேடியோ சிக்னல் ரேடார் – உலோகத்தில் மோதும் கதிர்களைப் பதிவு செய்து, விமானத்தின் திசை, வேகம், உருவம் அனைத்தையும் கணக்கிடும்.
2. உஷ்ண அடிப்படையிலான ரேடார் – விமான இன்ஜின் உமிழும் சூட்டை அடிப்படையாகக் கொண்டு குறிக்கோளை அடையும்.
3. முன்னேற்றமடைந்த எலக்ட்ரானிக்ஸ் ரேடார் – வேகமாக திரும்பும் கதிர்களை அளந்து, துல்லியமான பிம்பங்களை உருவாக்கும்.
ஆனால் B-52 இவையெல்லாம் தாண்டி “ரேடார் கண்ணுக்கு தெரியாதது” என அமெரிக்கா பெருமையாக பேசுகிறது.
🇮🇳 இந்திய விஞ்ஞானிகளின் பதில்!
இந்தியாவின் விஞ்ஞானிகள் இதனை எதிர்கொள்ளும் வகையில், போட்டோனிக்ஸ் ரேடார் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இது கேமரா போல ஒளிக்கதிர்களின் நுண்ணிய பதிவுகளைப் பயன்படுத்தி, விமானத்தை பிம்பமாக அடையாளம் காணும்.
தற்போது சோதனையில் 30 கிலோமீட்டர் வரை மட்டுமே செயல்படும்.
ஆனால் ஆராய்ச்சி தொடர்கிறது;
500 கி.மீ. வரை செயல்பட்டால், B-52 போன்று “கண்டுபிடிக்க முடியாத” விமானங்களும் இந்தியாவின் கண்ணுக்குத் தப்பாது.
அதோடு, வேளாண்துறை பயன்படுத்தும் காற்று ரேடார்கள் கூட 1000 கி.மீ. தூரத்தில் காற்றின் அசைவுகளை அளக்கின்றன. அவற்றை மேம்படுத்தினால், வானில் பறக்கும் எந்த போர் விமானத்தையும் காற்றின் வேக மாற்றத்தால் கண்டு பிடிக்க முடியும்.
✍️ ஆசிரியர் கருத்து:
அமெரிக்கா தன் ரகசியங்களைப் பாதுகாக்க B-52 ஐ யாருக்கும் விற்கவில்லை. ஆனால் அறிவியலின் களத்தில் யாரையும் தடுக்க முடியாது.
இன்று இந்திய விஞ்ஞானிகள் தொடங்கிய போட்டோனிக்ஸ் ஆராய்ச்சி நாளை உலகளவில் “ஸ்டெல்த் விமானங்களின் சவாலை” முறியடிக்கும்.
ஒருநாள், “B-52 உலகை நடுங்கச் செய்தது” என்ற வரியை,
“இந்திய போட்டோனிக்ஸ் ரேடார் உலகை ஆச்சரியப்படுத்தியது” என வரலாறு மாறும்!
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்
தமிழ்நாடு டுடே செய்திகள்